பருவமழை: ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படிக்கலாமே.. இடிந்து விழுந்த கமலாலய சுற்றுச்சுவர்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பல பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
Advertisement
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்களுடன் பல துறை அமைச்சர்களும், அரசுத் துறை செயலாளர்கள், உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.