தமிழ்நாடு

சமையல் எரிவாயு உருளை விலை கடந்து வந்த பாதை

DIN

சென்னை: சமையல் எரிவாயு உருளையின் விலை செப்டம்பர் 1ஆம் தேதி ரூ.25 அதிகரிக்கப்பட்டு, புதன்கிழமை முதல் ஒரு எரிவாயு உருளை ரூ.900.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஓராண்டில் எரிவாயு உருளையின் விலை ரூ.285 அதிகரித்துள்ளது. அதே நேரம், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை ரூ.75 உயா்ந்து, ரூ.1831.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜூலை 1ஆம் தேதியிலிருந்து சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதிதான், சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டதும், அதற்கு முன்பு ஜூலை 1ஆம் தேதியும், அதே ரூ.25 உயர்த்தப்பட்டதும் நிச்சயம் நினைவிருக்கும்.

எரிவாயு உருளை விலை இந்த ஆண்டில் மட்டும் ரூ.190 அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதப் பிறப்பின் போது ஒரு எரிவாயு உருளை விலை ரூ.710 ஆக இருந்துள்ளது. பிறகு பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறையும், மார்ச், ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தலா ஒரு முறையும் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து கணக்கிட்டால் ரூ.290 உயர்ந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு எரிவாயு உருளையின் விலை ரூ.427 ஆக இருந்த நிலையில், அது தற்போது இரண்டு மடங்காகியுள்ளது.

கடந்த ஓராண்டில் எரிவாயு உருளை மீதான விலையேற்றம் இது ஏழாவது முறையாகும். ஆனால் ஒரே ஒரு முறை அதாவது கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மட்டும் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் எவ்வளவு தெரியுமா? ரூ.10.

அதேவேளையில், நாட்டிலேயே கொல்கத்தாவில்தான் மானியமில்லா சிலிண்டர் விலை மிக அதிகமாக உள்ளது. இங்கு ஒரு சிலிண்டர் விலை ரூ.911க்கும், அதற்கடுத்த இடத்தில் சென்னையும் உள்ளது. இங்கு ரூ.900க்கும், தலைநகர் தில்லியில் ரூ.884க்கும், மும்பையில் ரூ.884க்கும் விற்பனையாகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT