முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் ரௌடி வெட்டிக் கொலை: பழிக்குப்பழியாக தொடரும் சம்பவம்

திருச்சியில் பழிக்குப்பழியாக ரௌடி ஒருவர் திங்கள்கிழமை காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
கோப்புப்படம்
பகிர்:

திருச்சி: திருச்சியில் பழிக்குப்பழியாக ரௌடி ஒருவர் திங்கள்கிழமை காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற வாழைக்காய் விஜய். கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில மாதங்களுக்கு விஜய் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதி கல்யாண சுந்தரபுரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், கிஷாந்த் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அனைவரும் பிணையில் (ஜாமீனில்)  விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை கிஷாந்த் (23) இயற்கை உபாதைக்காக திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் கீழே உள்ள மாநகராட்சி கழிப்பறைக்குச் சென்றார். அங்கு திட்டமிட்டு மறைந்திருந்த 4 பேர் கிஷாந்தை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காந்தி மார்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைக்காய் விஜய் கொலை தொடர்பாக ஜெயச்சந்திரன் தரப்பினரை விஜயின் அண்ணன், தம்பிகள் வெட்டிக் கொலை செய்ய வாய்ப்பு உள்ளதாக, திருச்சி மாநகர உளவுத்துறை போலீசார் எச்சரித்திருந்த நிலையிலும் கவனக்குறைவு காரணமாக இச்சம்பவம் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →