தமிழ்நாடு

வாணியம்பாடி கொலை வழக்கில் எடுத்த நடவடிக்கை என்ன? ஸ்டாலின் விளக்கம்

DIN

வாணியம்பாடியில் கஞ்சா பதுக்கல் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்த நபர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் இன்று விளக்கம் அளித்தார்.

வாணியம்பாடி பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதிலில், எதிர்க்கட்சித் தலைவர் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு பிரச்னைகளை இந்த அவையிலே கிளப்பி, அவற்றின் நிலை என்ன என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

வாணியம்பாடி பகுதியில் நடைபெற்ற அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் சொல்கிறபோது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டு, சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அந்தச் செய்தியையும் சொல்லி, அவர் இங்கே ஒப்புதல் தந்திருக்கிறார். எனவே, அதுகுறித்து நான் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த 26-7-2021 அன்று, வாணியம்பாடி ஜீவா நகரைச் சார்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல் துறையினர் சோதனை செய்திருக்கிறார்கள். அதில் 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைபேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, பைசல் உள்ளிட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கஞ்சா குறித்த தகவலை வசீம் அக்ரம்தான் காவல் துறையினருக்குக் கூறியது என்று இம்தியாஸ் கருதியுள்ளார்.

இந்நிலையில், 10-9-2021 அன்று மாலை சுமார் 6-30 மணியளவில் வசீம் அக்ரமை வழிமறித்து, அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தக் கொலை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரைச் சார்ந்த பிரசாத் மற்றும் மண்ணிவாக்கத்தைச் சார்ந்த டெல்லி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வாணியம்பாடி பகுதியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு அடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT