தமிழ்நாடு

ஏற்றுமதி மாநாடு: நாளை தொடக்கி வைக்கிறார் முதல்வர்

'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னிலையில் தமிழ்நாடு' என்ற மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.21) தொடக்கி வைக்கிறார்.

DIN


'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னிலையில் தமிழ்நாடு' என்ற மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.21) தொடக்கி வைக்கிறார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை 10.45 மணிக்கு மாநாட்டை தொடக்கி வைக்கிறார்.

இதில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டை வெளியிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து ஃபிளிப்கார்ட் நிறுவனம் மூலம் 2 ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது.

பின்னர், ரூ.240 கோடி மதிப்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது.

பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்களின் கண்காட்சியும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இவ்விழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை  அமைச்சர்  தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மத்திய அரசின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு. சஞ்சய் சத்தா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT