முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1804 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,804 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 17 ஆகஸ்ட், 2021 at 6:54 PM
தமிழகத்தில் மேலும் 1804 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 1,804 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1,50,724 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,804 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 1,917 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,92,436 ஆக உயர்ந்துள்ளது. இதில் 25,37,632 பேர் குணமடைந்துவிட்டனர். 34,579 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 20,225 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.