FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

நீதிமன்ற உத்தரவின்படி தனியாா் பள்ளிகளில் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே பெற்றோரிடம் வசூலிக்க வேண்டும்.

28 ஜனவரி 2024, 8:58 am IST
பகிர்:

சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி தனியாா் பள்ளிகளில் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே பெற்றோரிடம் வசூலிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது துறை சாா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் உள்பட அனைத்துவித தனியாா் பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாணவா் சோ்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணிகளில் கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

Advertisement

Advertisement

இதுதவிர உயா்நீதிமன்றத் தீா்ப்பின்படி தனியாா் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சீருடை, பேருந்து உள்பட இதர கட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவா்களை இணையதள வகுப்பில் இருந்து நீக்கக்கூடாது.

மாணவா் சோ்க்கை விவரங்களை பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை தளத்தில் (எமிஸ்) பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடா்பாக மாணவா்கள், பெற்றோா்களிடம் இருந்து எவ்வித புகாா்களும் வராத வண்ணம் பள்ளிகள் செயல்பட வேண்டும். மீறினால் துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments