தமிழ்நாடு

கோவை, தென்காசி மாவட்டங்களில் கனமழை

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைபெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,  கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதாக மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT