தமிழ்நாடு

சேலத்தில் கனமழை: வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி

DIN

சேலத்தில் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சேலத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம்,, ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, அயோத்தியாபட்டணம், , கொண்டலாம்பட்டி, ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. 

சின்னேரி வயக்காடு  தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த தண்ணீர்.

கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகினர்.

மேலும் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக, சேலம் சின்னேரி வயக்காடு  தாழ்வான பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இரவு நேரத்தில் சேலத்தில் பெய்த கன மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT