தமிழ்நாடு

மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளா?: முதல்வர் நாளை ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர், வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர், துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

வடமாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்க்கை அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்படுள்ளன. தடுப்பூசி போடும் பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இரண்டாம் தவணை தடுப்பூசியை ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் போட வேண்டியுள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஏப்ரல் 27-ஆம் தேதி மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT