அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ல் கிராம சபைக் கூட்டம்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில், வரவு, செலவு கணக்குகள் பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
படிக்க | 'காலத்தினால் செய்த நன்றி': ஊடகத் துறையினருக்கு முதல்வர் பாராட்டு
Advertisement
Advertisement
தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதியன்று கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி) போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டம் (ஊரகம்) குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.