குமரி மாவட்டத்தில் அதிகனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் அறிவிக்கையின்படி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை அதிகனமழை பெய்ய உள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (ஆக.2) விடுமுறை அளிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மேலும் அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும், மறு அறிவிப்பு வரும்வரை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
வெள்ள சேத விவரங்கள் மற்றும் வெள்ளம் தேங்கிய விவரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மற்றும் 04652 - 231077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.