தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு!

DIN


ராணிப்பேட்டை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்திற்காக அமைக்கப்பட்ட ஹெலிபேட் மைதானத்தில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் புதன்கிழமை காலை திடீரென தரை இறங்கியதைப் பார்த்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஊழியர்களிடம் கேட்டபோது.. 

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆம்பியர் என்ற தனியார் நிறுவன மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உரிமையாளரான பெங்களூருவைச் சேர்ந்த நாகேஷ் மற்றும் அந்நிறுவனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் நான்கு பேர் வந்து இறங்கி அங்கிருந்து கார் மூலம் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டு வந்ததாகத் தெரிவித்தனர். 

அவர்கள் வழக்கமாக பெங்களூருவிலிருந்து விஐடி வளாகத்தில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில்  இறங்கி அங்கிருந்து கார் மூலம் வந்து செல்வதாகவும், இன்றைய தினம் அங்கு தரை இறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அம்மூர் அருகே உள்ள ஹெலிபேட் மைதானத்தில் தரையிறங்கியதாகவும் தெரிவித்தனர். 

இந்த நிலையில் ஹெலிகாப்டர் தரையை இறங்கிய சம்பவம் குறித்து தகவல் அறிந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து ஹெலிகாப்டர் முன் நின்று ஆர்வமுடன் புகைப்படமும், செல்பியும் எடுத்துச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT