தமிழ்நாடு

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் பாலஸ்தாபனம்: தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

DIN


சீர்காழி: சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் பாலஸ்தாபனத்தை தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பிடாரி வடக்கு வீதி கீழ் திசையில் சட்டைநாதர் தேவஸ்தானத்திற்கு உள்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் பதினெண் புராணேஸ்வரர் உடையார் ஆகவும், அம்மன் சௌந்தரநாயகி அம்மன் காட்சி தருகின்றனர். 

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் பாலஸ்தாபனம் செய்யும் தர்மபுரம் ஆதீனம்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இக்கோவிலுக்கு திருப்பணிகள் தொடங்கி குடமுழுக்கு நடத்திட தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஏற்பாட்டின் படி வியாழக்கிழமை பாலஸ்தாபனம் நடைபெற்றது. 

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை பார்வையிட்ட தர்மபுரம் ஆதீனம்.

முன்னதாக சிறப்பு ஹோமம்  பூஜைகள் செய்து கோயில் திருப்பணிகளை அடிக்கல் நாட்டில் தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார். இதில், திருப்பணி குழுவினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

பதினெண் புராணங்களை ஒன்றிணைக்கும் போது இக்கோவில் மூலவர் சிவபெருமான் புராணங்களை ஒன்றிணைக்கும் தலைவர் ஆக இருந்ததாக கோயில் வரலாறு கூறுகிறது. கோவில் குடமுழுக்கு நடைபெற்று சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT