முகப்பு
தமிழ்நாடு

நிதியே இல்லை! பேனா சின்னம் அவசியமா? எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசிடம் போதுமான நிதியே இல்லை எனும்போது கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பது அவசியம் தானா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

தமிழக அரசிடம் போதுமான நிதியே இல்லை எனும்போது கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பது அவசியம் தானா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, என ஆட்சிக்கு வந்து திமுக செய்த சாதனைகள் இவை மட்டுமே என விமர்சித்துள்ளார்.  

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு பதிலாக, ரூ.80 கோடியில் தமிழக மக்கள் அனைவரும் பேனா வாங்கிக் கொடுத்துவிடலாம் என சுட்டிக்காட்டிய பழனிசாமி, 

கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாத உதவித்தொகை போன்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.  
 
முழு கட்டுரையைப் படிக்க →