தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் அஞ்சலி

ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

DIN

ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(டிச. 6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதையடுத்து, சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினார். 

சேப்பாக்கம் அரசினர் மாளிகையில் இருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதைத் தொடர்ந்து உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். 

முன்னதாக, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல தொடர்ந்து சசிகலா உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமாா் கோயல் பதவியேற்பு!

தருமையாதீன குரு முதல்வா் கற்றளி ஆலய கும்பாபிஷேகம்

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

புகையிலை பொருள்களை கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT