முகப்பு
தமிழ்நாடு

'அன்பின் சாரலில் நனைந்தேன்' - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

தென்காசி மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:03 AM
பகிர்:

தென்காசி மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதிகை அதிவிரைவு ரயிலில் நேற்று(புதன்கிழமை) இரவு பயணம் மேற்கொண்டார். இன்று காலை தென்காசி வந்த  அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தென்காசி ரயில் நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலின்,  திரண்டிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். 

தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையே உரையாற்றினார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 'பொதிகையில் புறப்பட்டு தென்காசி வந்தடைந்து, அம்மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன்.

1,03,508 பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

ஆராதனா போன்ற குழந்தைகளும் நம்பிக்கை வைத்துள்ள அரசு என்ற பெருமையோடு பணியைத் தொடர்கிறேன்' என்று பதிவிட்டு தென்காசி பயணம் குறித்த விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →