தமிழ்நாடு

திமுகவில் இணைந்த கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் 

அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார். 

DIN

அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர் செந்தில் பி.கார்த்திகேயன் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த காளப்பட்டி பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் பி.விஜயகுமார், 7வது வார்டு பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.கலைமணி, 23வது வார்டு என்.ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப அணி 7வது வார்டு செயலாளர் ஜே.மகேஷ்குமார், பகுதி மாணவர் அணிச் செயலாளர் கே.ஆர்.கார்த்திகேயன் மற்றும் எஸ்.மகேஷ், பி.சந்திரசேகர், என்.ஆறுமுகம், எஸ்.சுந்தரவடிவேல் (எ) அப்பு, ஆர்.துரைசாமி, எம்.நடராஜ், பி.பிரவின்குமார், பி.ரவிகுமார், ஏ.குணசேகர், கே.கௌதம், டி.மோகன்பாபு, கே.கார்த்திக், பி.ரங்கராஜ், ஏ.ஜெயகாந்த், வி.அருண்குமார், சி.ஹரிஸ்சோமு, எம்.சக்திவேல், எம்.பிரகாஷ், வி.நாகராஜ் ஆகியோர் அ.தி.மு.க.விலிருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிகழ்வின்போது திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கு.க.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிரட்டிப் பணம் பறித்தல், துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

நாய்கடியால் மட்டுமின்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் -உச்சநீதிமன்றம்

சென்னையில் மேலும் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

கோட்டக் மஹிந்திரா வங்கி கடனளிப்பு 16% உயா்வு

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

SCROLL FOR NEXT