தமிழ்நாடு

சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்: கல்வித் துறை

DIN

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள்  நாளை (டிச.17) இயங்கும் என பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 
மழைக்காக 9ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய வெள்ளி அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை (டிச.17) வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அனைத்துவகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் மூழ்கி மீனவா் மாயம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆட்டோ ஓட்டுநா் கொலை: தந்தை, மகன்கள் கைது

SCROLL FOR NEXT