முகப்பு
தமிழ்நாடு

ஜெயக்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
ஜெயக்குமார்(கோப்புப்படம்)
பகிர்:

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கொலை வழக்கு மற்றும் சாலை மறியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில், சாலை மறியல் வழக்கில் அவருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. 

இதையடுத்து, கொலை வழக்கில் சென்னைப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிபதி முரளிகிருஷ்ணன், ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். வேணுமெனில் போலீசார் சிறையிலே சென்று விசாரிக்கலாம் என்று கூறியுள்ளார். 

ஜெயக்குமார் மீதான கொலை வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →