சங்ககிரி, எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியில் வெளியீடு
சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
சங்ககிரி, எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன் வெளியிட வட்டாட்சியர்கள் சங்ககிரி எஸ்.பானுமதி, எடப்பாடி பி.விமல்பிரகாசம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தேர்தல் துணை வட்டாட்சியர்கள் சங்ககிரி பி.சிவராஜ்., எடப்பாடி எஸ். ரமேஷ், சங்ககிரி மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் 1,39,132 ஆண் வாக்காளர்களும், 1,36,908 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்கள் உட்பட 2,76,058 பேர் உள்ளனர். எடப்பாடி தொகுதியில் ஆண்கள் 1,46,323 பேரும், பெண்கள் 1,42,295 பேரும், 24 இதர வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2,88,642 பேர் உள்ளனர்.
வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சங்ககிரி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகள் உட்பட சங்ககிரியில் 311 இடங்களிலும், எடப்பாடியில் 321 இடங்களிலும், எடப்பாடி நகராட்சி ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இப்பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | வகைப்படுத்தப்படாத புதிய வகை கரோனா!