அதிமுக அலுவலகத்தில் உள்ள ஓபிஎஸ் அங்கிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள, மறுபுறம் ஓபிஎஸ், அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றார்.
அங்கிருந்து அவர் முக்கிய ஆவணங்களை தன்னுடைய வாகனத்தில் ஏற்றியுள்ளார். இதுகுறித்த விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக தொடர்பான முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமியையும் கே.பி. முனுசாமியையும் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இபிஎஸ், கே.பி.முனுசாமியை நான் நீக்குகிறேன்: ஓபிஎஸ் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.