முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,223 பேருக்கு கரோனா; சென்னையில் 575

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,223 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 575 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 18 ஜூலை, 2022 at 8:22 PM
கோப்புப் படம்
பகிர்:


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,223 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 575 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நேற்று 2,316 பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2,223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,20,000-ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,030 ஆக உள்ளது. 

இன்று ஒரு நாளில் மட்டும் 2,402 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,65,064-ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 32,511 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 6.65 கோடி பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் புதிதாக   575 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.