தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் தீ: ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. 

கிருஷ்ணகிரி மேற்கு இணைப்பு சாலையில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை செயல்பட்டு வருகிறது.  இதன் உரிமையாளர் பாஸ்கர். 

இந்தக் கடையில் இருந்து வியாழக்கிழமை இரவு கரும் புகை வருவதை கண்டு அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடை முழுவதும் பரவிய தீயை இரண்டு மணி நேரம் போராடி அணைத்தனர். மேலும், அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை

இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள், எண்ணெய் பொருள்கள் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.  

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.  

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT