முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ் - ஓபிஎஸ்ஸை சந்திப்பாரா பிரதமர் மோடி?

சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வரவுள்ளார்.

இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா முடிவடைந்தவுடன், ஆளுநர் மாளிகைக்கு செல்லும் பிரதமர் மோடி, பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

அப்போது பிரதமரை சந்திக்க இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர்களது சந்திப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விருந்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவில்லை.

இந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர், இபிஎஸ் - ஓபிஎஸை சந்திக்க நேரம் ஒதுக்குவாரா? நேரம் ஒதுக்கினால் ஒன்றாக சந்திப்பாரா? இல்லை தனித்தனியாக சந்திப்பாரா? என்ற பல கேள்விகளுக்கு மாலை பதில் தெரிந்துவிடும்.

முழு கட்டுரையைப் படிக்க →