கோப்புப்படம் 
தமிழ்நாடு

'ஒற்றைத் தலைமை' சாத்தியமா? - ஜெயக்குமார் பதில்!

பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

DIN

பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்துவரும் நிலையில், வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதிக்க இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செம்மலை, வைகைச் செல்வன், வளர்மதி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 11 பேர்  கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வருகிற 18 ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும். 

இன்றைய கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசப்படவில்லை. ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். சற்று நேரத்தில் ஓபிஎஸ், தலைமை அலுவலகம் வருவதற்கும் கூட்டம் நிறைவு பெற்றதற்கும் சம்மந்தம் இல்லை' என்றார். 

முன்னதாக, அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

குளிா் காலத்தில் அதிகரிக்கும் முக வாதம்: முதியோா், இணை நோயாளிகளுக்கு எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் பணி நிலவரம்

44 இளநிலை பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு

SCROLL FOR NEXT