அதிமுக செயல்வீரர் கூட்டம் திடீரென ரத்து
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் பெரியகுளத்தில் நாளை நடக்கவிருந்த அதிமுக செயல்வீரர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் பெரியகுளத்தில் நாளை நடக்கவிருந்த அதிமுக செயல்வீரர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் புதன்கிழமை இரவு நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அதிமுக பிரிந்திருப்பதால்தான் தோல்வி ஏற்பட்டது என்றும் சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'அதிமுக பிளவுபட்டுள்ளதால் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நிபந்தனையற்றப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்' என அதிமுக மாவட்டச் செயலாளர் எம். சையதுகான் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக நாளை பெரியகுளத்தில் ஓபிஎஸ் தலைமையில்
நேற்று முன்தினம் பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.