தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்

DIN

வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் ஒடிஸா அல்லது வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் தீவிரமாகி ஒடிஸா கடற்கரை நோக்கி நகரவுள்ளது. இதன்காரணமாக, மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 ‘அசானி’ புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கில் 550 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஒடிஸா மற்றும் ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிஸா கடற்கரை பகுதிகளில் மே 10-ம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இந்த புயல்    வடக்கு ஆந்திர கடற்கரையை நெருங்குவதற்கு முன் வடகிழக்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT