தமிழ்நாடு

சட்டென மாறிய வானிலை: சென்னையில் மழை; மக்கள் மகிழ்ச்சி

DIN

சென்னை: கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் ஒரு நாள் கூட விடுமுறை விடாமல் சென்னை மக்களை வாட்டிவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் மழையானது மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

ஒட்டுமொத்த சென்னையும் அனல் வெயிலில் தகித்துக் கொண்டிருக்கும் போது, பல்வேறு மாவட்டங்களில் மழை பற்றிய அறிவிப்புகளும், மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு போன்ற செய்திகளும் சென்னை மக்களை சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாக்கியது.

இந்த நிலையில்தான், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதுவே பலருக்கும் மகிழ்ச்சியை தந்த நிலையில், அதனை மேலும் கூட்டும் வகையில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னை, தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சென்னை மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கோடை மழையால், கோடை வெப்பம்  தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT