முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா: சென்னையில் 23

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 38 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.  கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட குறைந்தே காணப்படுகிறது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.  அதில், இன்று புதிதாக 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,54,431-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,965-ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 441-ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →