திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள் 
தமிழ்நாடு

திருப்பூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN


திருப்பூரில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஜெயபிரகாசம் தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்ற ஓய்வூதியர்கள் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் 77 மாத அகவிலைப்படி தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியத்திற்கென நிதி ஒதுக்க வேண்டும். கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பணியிருக்கும்போது உயிரிழந்த, ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய கால பலாப்பலன்களை வழங்க வேண்டும் என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் அ.நிசார் அகமது,ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் ஜி.பழனிசாமி, செளந்தரபாண்டியன், எம்.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்; நடந்தது என்ன?

ஏவிஎம் சரவணன் மறைவு! முதல்வர் ஸ்டாலின், ரஜினி அஞ்சலி!

டியூட்-க்கு அனுமதியளித்த இளையராஜா!

பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 1.5% வரை உயர்வு!

SCROLL FOR NEXT