முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இடைவிடாது பெய்யும் மழை: எங்கே அதிகபட்ச மழைப் பதிவு?

சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:43 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 4 மணி வரை பதிவான மழை நிலவரம்: 

சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

நுங்கம்பாக்கம் - 7.7 செ.மீ 

நந்தனம் - 5.2 செ.மீ 

பூந்தமல்லி - 4.5 செ.மீ 


காரைக்கால் - 7.0 செ.மீ மழையும்,  நாகை - 4.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து  வருகிறது. 

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், வண்டலூர், மண்ணிவாக்கம், ஆவடி, ஊரப்பாக்கம், பள்ளிக்கரணை, சிட்லப்பாக்கம், பெரும்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →