முகப்பு
தமிழ்நாடு

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள், 14 நாள்களுக்குள் அபாரதத் தொகையை செலுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 3 நவம்பர் 2022, 1:45 pm IST
கோப்புப்படம்
பகிர்:

குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள், 14 நாள்களுக்குள் அபாரதத் தொகையை செலுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

14 நாள்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்ற வாரண்ட் வழங்கிய 14 நாள்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.10,000 அபாரதம் விதிக்கப்பட்டு உள்ளது. காவல்துறையினரிடம் பிடிபடுபவர்கள் அபார ரசீது மட்டும் பெற்றுச் சென்றுவிட்டு பணம் செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

அபராதத் தொகையை செலுத்தாமல் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 14 நாள்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என்று எச்சரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments