மக்கள் எதிர்ப்பையோ கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை: மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் இன்று (14.11.2022) கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில்
நீங்கள் நினைப்பது போல, மக்கள் எங்களுக்கு எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை. பெரிய ஏமாற்றத்தோடு இன்றைக்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் இன்று (14.11.2022) கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சீர்காழியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இதையும் படிக்க.. உடற்பயிற்சியின்போது மரணம் நேரிடாமல் தவிர்ப்பது எப்படி?
மக்கள் என்னென்ன கோரிக்கை வைத்திருக்கிறார்கள்? என்று கேட்டதற்கு, முதல்வர் அளித்த பதிலில், அதாவது நீங்கள் நினைப்பது போல, எங்களுக்கு எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை. அதனால், நீங்கள் பெரிய ஏமாற்றத்தோடு இன்றைக்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, சீர்காழி போன்ற பகுதிகளில்தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நான் உடனடியாக நேற்று முன்தினமே செந்தில்பாலாஜி, மெய்யநாதன், ரகுபதி ஆகிய மூன்று அமைச்சர்களையும் இங்கு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் அனுப்பி வைத்து, உடனடியாக எல்லா பணிகளிலும் ஈடுபட வைத்தேன். மாவட்ட ஆட்சியர் பிரமாதமாக செய்திருக்கிறார்கள். இது அவர்கள் மட்டும் செய்தால் போதாது, நானும் போக வேண்டும் என்கிற முடிவோடு நேற்று இரவோடு இரவாக பாண்டிச்சேரியில் வந்து தங்கி, காலையில் 7.30 மணிக்கு எழுந்து, எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். பணிகள் திருப்தியாக உள்ளன. அதனால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சில குறைகள் உள்ளன. அதையும் விரைவில் இன்னும் ஐந்தாறு நாட்களில் தீர்த்து வைப்போம் என்று முதல்வர் கூறினார்.