தமிழ்நாடு

சின்ன தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள்: மக்கள் அச்சம்

யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் மீண்டும் நுழையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

DIN

 
கோவை மாவட்டம் சின்ன தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் மீண்டும் நுழையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பன்னிமடை பகுதிக்குள் இரவு கூட்டத்துடன் வந்த ஒற்றை யானை ஒன்று கதிர்நாயக்கன்பாளையம் செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாயி ஒருவரின் வீட்டுக்குள்ளே நுழைய கேட்டின் முன்பு நின்று கொண்டிருந்தது. இதனை வீட்டிற்குள் இருந்தவர்கள், யானை வீட்டுக்கு வெளியே நிற்கும் காட்சியை விடியோவாக பதிவு செய்துள்ளனர்.

மேலும், அந்த யானையை மெதுவாக போ... போ... என கூறும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு வாகனத்தில் மாணவா்கள் ஆபத்தான பயணம்

தீபாவளி: தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

ட்ரோன் தாக்குதல்: பாக். மீது தலிபான் குற்றச்சாட்டு

மாணவா்களுக்கு உயிா்ம வேளாண்மை கண்டுணா்வு சுற்றுலா

தீ விபத்து தடுப்பு செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT