தமிழ்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

DIN

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் போதைப்பொருள்கள் ஒழிக்கும் நடவடிக்கையாக அதன் விற்பனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ‘ஆபரேஷன் கருடா’ என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. 

இதன் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள்களைக் கடத்துபவர்கள், அதோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக இதுவரை 127 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் 175 பேரைக் கைது செய்துள்ளதாகவும் சிபிஐ கடந்த மாதம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் முற்றிலும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT