தமிழ்நாடு

மின்கம்பத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலை: மின்வாரியத்தின் அலட்சியம்!

மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக, காஞ்சிபுரம் அருகே  சாலை விரிவாக்க பணியின் போது மின்கம்பத்தை அகற்றாமல்  சாலை அமைத்துள்ளனர்.

DIN

காஞ்சிபுரம்: மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக, காஞ்சிபுரம் அருகே  சாலை விரிவாக்க பணியின் போது மின்கம்பத்தை அகற்றாமல்  சாலை அமைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் புறவழி சாலையாக திருபருத்திகுன்றம் சாலை அமைந்துள்ளது.

ஒரு வழி சாலையாக இருந்த இந்த சாலையை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் மூலம் 3.5 கீ.மீ. நீளம் கொண்ட மின்கம்பங்களை அகற்றாமல் சாலைப் பணி செய்யப்பட்டது.

அப்போது, சாலையில் இருந்த மின்கம்பங்களை மாற்ற நெடுஞ்சாலைத்துறை மின்வாரிய அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவித்தது. மேலும் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் இருக்க உடனடியாக பணி மேற்கொள்ளப்பட்டது.

தற்போது பணி நிறைவு பெற்று ஓர் மாத காலத்திற்குப் பிறகும் கூட சாலையின் நடுவே மின் கம்பம் அகற்றப்படாமல் சாலையில் உள்ளதால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்கள் இப்பணியை மேற்கொள்ள அவசரம் காட்டாமல் அலட்சியமாக கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை மின்வாரிய அலுவலகம் விரைவாக பணி மேற்கொள்ளப்பட்டு விபத்தில்லா பயன்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகத்தின் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பம்புகள் உள்ளிட்டவை நீக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகை போல் சாலை பணிக்காக மின்கம்பம் அகற்றப்படாமல் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT