தமிழ்நாடு

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்: ஒருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வீட்டு வளாகத்தில் மினிலாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். 

DIN

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வீட்டு வளாகத்தில் மினிலாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை ராணிப்பேட்டை மாவட்ட தனிப்படை காவல் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 

அந்த மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே கொண்டாபுரம், வாசுகி தெருவில் ஓரு வீட்டில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தவதற்காக தயாராக இருப்பதாக மாவட்ட தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டதில் மினிலாரியில் 4 டன் ரேஷன் அரிசி கடத்த தயார் நிலையில் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து 75 சிப்பத்தில் இருந்த 4 டன் ரேஷன் அரிசியை மினிலாரியுடன் காவல் துறையினர் பிடித்தனர். இது தொடர்பான தகவல் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டதை  தொடர்ந்து காவல் ஆய்வாளர் சதீஷ், உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் உள்ளிட்ட காவல் துறை குழுவினர் அரிசி மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக அந்த வீட்டு உரிமையாளர் சந்திரசேகர் (42) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திரா வழியே கர்நாடகத்திற்கு கடத்த இருந்ததாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT