தமிழ்நாடு

சீர்காழியில் முதல்வரின்  காலை உணவுத் திட்டம் தொடக்கம்

சீர்காழியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மைய சமையல்  கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

DIN

சீர்காழியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மைய சமையல்  கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட எட்டாவது வார்டில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால், மேலாளர் காதர் கான், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், எழுத்தர் ராஜ கணேஷ், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற உறுப்பினர் நாகரத்தினம் செந்தில் வரவேற்றார்.

விழாவில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கினார். முன்னதாக காலை சிற்றுண்டி மைய சமயல் கூட புதிய கட்டடத்தை ஆர்டி எம் ஏ. ஜானகி திறந்து வைத்தார். 

இவ்விழாவில் கல்வித்துறை அதிகாரி மற்றும் நகர் மன்ற துணை தலைவர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் , நகர்மன்ற  உறுப்பினர்கள் ராமு , வேல்முருகன் , முழுமதி, ஜெயந்தி, முபாரக், ராஜேஷ், பாலமுருகன்,  சுகாதார ஆய்வாளர் செந்தில்  மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு

SCROLL FOR NEXT