இந்தியா - பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: முதல்வர் தொடக்கி வைத்தார்!
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 9) தொடக்கிவைத்தார்.
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 9) தொடக்கிவைத்தார்.
சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் திடலில், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. குரூப் சுற்றின் கடைசி போட்டியான இந்த ஆட்டத்தில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, நான்காம் இடத்தில் உள்ள பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்த போட்டியில் வென்று பாகிஸ்தான் நான்காம் இடத்தை தக்கவைக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதியில் இரண்டு அணிகளும் மோதும் வாய்ப்பு உருவாகும்.