தமிழ்நாடு

அதிமுக மாநாட்டுக்கான ஜோதி ஓட்டம்: இபிஎஸ் தொடக்கிவைத்தார்

மதுரையில் அதிமுக மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார். 

DIN

மதுரையில் அதிமுக மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார். 

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக பிரம்மாண்ட அளவில் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அதிமுக மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டை கட்சி  தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார். 

சென்னையில் இருந்து மதுரை நோக்கி இந்த ஜோதி ஓட்டம் 6 நாள்கள் நடைபெறும். 50 பேர் கொண்ட குழுவினர், ஒவ்வொருவரும் 5 கிமீ தூரம் ஓடி 6 நாள்கள் முடிவில் அதாவது மாநாடு நடைபெறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை ஜோதி வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT