தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு சீரழித்துவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: இந்தியாவின் ஒட்டுமொத்த கட்டமைப்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு சீரழித்துவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தென் மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நனவாக்குவோம். மத்தியில் ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்டது திமுகதான். 

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பாதுகாப்பு என்ற வாக்குறுதி என்னவாயிற்று? பாஜக ஆட்சியிலும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெண்டர் விடவே 9 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஹிந்தி, சமஸ்கிருதம் படிக்கவில்லை என்று நிதியமைச்சர் முடிந்த காலத்தைப் பற்றி கதைவிடுகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நேரம் கிடைக்கும் என்பதால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிலப்பதிகாரம் படிக்கலாம் என்று ஸ்டாலின் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வைப்பது முகவர்கள்தான். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் அரசாக திமுக அரசு திகழ்கிறது. உரிமையை கேட்டால் பிரிவினை என்று மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

மேலும், வட மாநில மக்களின் நம்பிக்கையையும் பாஜக அரசு இழந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT