தமிழ்நாடு

சந்திரயான் -3: உலகை வியப்பில் ஆழ்த்தியது இந்தியா!

DIN

சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சந்திரயான் -3 விண்கலன் மூலம் மூலம் லேண்டர் கலனை வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் இஸ்ரோ தரையிறக்கி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. 

இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது, அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற சக்திவாய்ந்த நாடுகள் வியக்கின்றன. வரலாற்று சிறப்புமிக்க சாதனையின்மூலம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்தியா. 

முதல்முறையாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் -3 கலனை நிலைநிறுத்தியதன் மூலம் தேசத்தின் பெருமையை நிரூபிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

தென்காசியில் ஜி.கே.ஹைப்பா் மாா்க்கெட் திறப்பு

ஹஜ் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

கீரைக்கடை நிறுவனம் சாா்பில் மூலிகை டீ அறிமுகம்

நியாய விலைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

SCROLL FOR NEXT