விரைவில் நிலைமை சீரடையும் என்று நம்புகிறோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க, வெள்ள நீரை அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல தன்னார்வலர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்,
'சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாத நிலை நீடிக்கிறது. உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் அனைவர்க்கும் கிடைப்பதை உறுதிசெய்ய, களத்தில் பலரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்கிறோம்!' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!