முகப்பு
தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு நிவாரண உதவிகள்: தூத்துக்குடி புறப்பட்டார் விஜய்

தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடிகர் விஜய் இன்று தூத்துக்குடிக்கு புறப்பட்டார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடிகர் விஜய் இன்று தூத்துக்குடிக்கு புறப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. 

இதனால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும், வியாபாரங்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை நடிகர் விஜய் வழங்குகிறார். 

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில்  சுமார்  1000 பேருக்கு மேல் நிவாரண பொருள்கள் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டன. அரிசி பலசரக்கு பொருள்கள் மற்றும் நிவாரணத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியை நெல்லை மற்றும் தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →