தமிழ்நாடு

தில்லி புறப்பட்டனர் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம் 

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தில்லி புறப்பட்டனர்.

DIN

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தில்லி புறப்பட்டனர்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினா்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தும், தில்லியில் உள்ள இந்தியத் தோ்தல் ஆணையத்திடம் திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்பட உள்ளன. இதற்காக அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் இன்று காலை தில்லி புறப்பட்டனர். பொதுக்குழு உறுப்பினா்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் காலை 11 மணி அளவில் வழங்கவுள்ளனா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் விவகாரத்தில் வேட்பாளா் தோ்வுக்கு உரிய அதிகார மையத்தைத் தீா்மானித்து தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.3) விசாரணை செய்து இடைக்கால ஏற்பாடாக ஓா் உத்தரவைப் பிறப்பித்தது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் பொதுக்குழுவை கூட்டி, அதிமுக சாா்பில் வேட்பாளரைத் தோ்வு செய்து, தோ்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான பணிகளை அதிமுக தலைமை (இபிஎஸ் குழு) தொடங்கியது; அதிமுக பொதுக்குழுவில், 2,662-க்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே.பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக உள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக திரட்டப்பட்ட பொதுக்குழு உறுப்பினா்களின் கடிதங்கள் இந்திய தோ்தல் ஆணையத்திடம் திங்கள்கிழமை அளிக்கப்பட உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தானைச் சோ்ந்த இருவா் கைது

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வங்கிக் கணக்கில் ரூ.116 கோடி பரிவா்த்தனை: செஞ்சி தொழிலதிபரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை

கல்லூரியில் காட்சி ஊடகவியல் மன்ற விழா

கிராம உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT