ஆளுநரை இன்று சந்திக்கிறார் அண்ணாமலை?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி இன்று நடைபெறுகிறது. பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். சென்னை சிவானந்தா சாலையில் இருந்து போர் வீரர்கள் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!