முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ்ஸுடன் முக்கிய ஆதரவாளர்கள் சந்திப்பு!

தேனி பெரியகுளத்தில் ஓபிஎஸ்ஸை அவரது ஆதரவாளர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:

தேனி பெரியகுளத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். 

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வந்துள்ளது ஓபிஎஸ் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முதலே தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு அவரது ஆதரவாளர்கள் வந்தவண்ணம் உள்ளனர். 

தொடர்ந்து ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் முக்கிய ஆதரவாளர்கள் சந்தித்துப் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ்ஸை சந்தித்துப் பேசி வருகின்றனர்.

முன்னதாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முறையிடுவோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →