விஜயகாந்த் 
தமிழ்நாடு

வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்புக்கு பிறகே மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த்

தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்புக்கு பிறகே மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

DIN

தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்புக்கு பிறகே மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு, மக்கள் ஐடி என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்ற பெயரில் 12 இலக்க எண் வழங்கப்படவிருப்பதும், அனைத்து சேவைகளையும் இதன் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. 

மேலும் மக்கள் ஐடி மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தத் திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், ஏற்கனவே அனைத்து சலுகைகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்தி வரும் நிலையில், மக்கள் ஐடி திட்டம் எதற்கு என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. 

இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன்வந்தால், நாட்டில் குழப்பம் ஏற்படாதா? எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு தமிழக மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படைத் தன்மையோடு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது- டிரம்ப் ஆலோசகா் நவாரோ கருத்து

மழை-வெள்ளம்: பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி- நேரில் ஆய்வு செய்த பின் பிரதமா் அறிவிப்பு

தமிழக வனப் பகுதியில் மருத்துவக் கழிவு கொட்ட முயன்றவருக்கு அபராதம்!

பதிவு செய்யாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

SCROLL FOR NEXT