கோப்புப் படம் 
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: கோயம்பேட்டில் ஜன. 17 வரை சிறப்பு சந்தை!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் இன்று நள்ளிரவு முதல் வரும் 17ஆம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் இன்று நள்ளிரவு (ஜன. 10) முதல் வரும் 17ஆம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பில், சிறப்பு சந்தை 10 நாட்கள் வரை நடத்தப்படும். 

இதில்,  கரும்பு, வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து மற்றும் மண்பானை, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். இந்த சிறப்பு சந்தைக்காக கடைகள் ஏலம் விடப்படும். அதில், மார்க்கெட்டில் உரிமம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என வியாபாரிகள் சார்பில் கோரிக்கை எழுந்தது. 

அதன்படி, 3 ஏக்கரில் சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாகம் சார்பில் முடி வெடுத்த நிலையில், இன்று இரவு 12 மணி அளவில் இருந்து வரும் 17ஆம் தேதி வரை சிறப்பு சந்தை அமைக்கப்பட உள்ளது.

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அங்காடி நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தையை ஏற்படுத்தி அங்காடி நிர்வாகமே பொறுப்பேற்று உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற நகைகள் திருட்டு

கவுந்தப்பாடியில் கொட்டித் தீா்த்த கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

பேரிடா் நிவாரண நிதி: மகாராஷ்டிரம், கா்நாடகத்துக்கு ரூ.1,950 கோடி -மத்திய அரசு ஒப்புதல்

கம்பத்தில் பலத்த மழை: 20 வீடுகள் சேதம் முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்

SCROLL FOR NEXT